ஆந்திர மாநிலத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன் பிறகு 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2024-24 ஆம் கல்வி ஆண்டு முதல் செமஸ்டர் தேர்வு முறை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையானது தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ செயல்படுத்துவதற்கு சிறப்பான முறையில் வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட பள்ளி முதல்வர்கள் அனைவருக்கும் அனுப்பப் பட்டுள்ளது. மேலும் இந்த செமஸ்டர் தேர்வு முறையானது மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.