Categories
தேசிய செய்திகள்

“செமஸ்டர் தேர்வு ரத்து இல்ல”… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

கல்லூரி இறுதி ஆண்டு பருவத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் பல்வேறு கல்வி நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் போன்றவை மூடப்பட்டு இருக்கின்றன. இந்த வகையில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்திருந்தாலும், மக்களின் நடைமுறை வாழ்க்கை பாதிக்கப்பட்ட வண்ணமே உள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை மாணவர்களுக்காக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள அறிவிப்பில், கல்லூரி மாணவர்களுக்கான இறுதித் தேர்வை ரத்து செய்ய முடியாது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாணவர்கள் சார்பில் தொடரப்பட்ட தேர்வு ரத்து செய்யும் வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து ரத்து செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |