Categories
மாநில செய்திகள்

பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை…. தமிழக அரசின் அறிவிப்பால் செம குஷியில் மாணவர்கள்…..!!!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் கடந்த 16-ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 23-ஆம் தேதியோடு தேர்வுகள் அனைத்தும் முடிவடைகிறது. ‌ இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி டிசம்பர் 24-ஆம் தேதி முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்த பிறகு ஜனவரி 2-ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் தொடங்கப்படும். மேலும் விடுமுறை தினங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்  கல்வித்துறை எச்சரித்துள்ளது.

Categories

Tech |