சுவைமிக்க சேமியா பாயசம் எளிமையானா முறையில் செய்வது பற்றி பார்க்கலாம்..
தேவையான பொருட்கள் :
சேமியா – 100 கிராம்
சர்க்கரை – 50 கிராம்
முந்திரி – 15
கிஸ்மிஸ் – 15
பால் – 1/2 லிட்டர்
நெய் – தேவைக்கேற்ப
ஏலக்காய் – 10
பாதம் – 10
செய்முறை :
முதலில் பாதாமை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
பின்பு வாணலியில் நெய் ஊற்றி பாதாமை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
சூடான நீரில் கிஸ்மிஸ் பழத்தை ஊற வைக்கவும்.
ஒரு வாணலியில் நெய் விட்டு ஏலக்காய் போட்டு வறுத்த பின்னர் சேமியாவை கைகளால் உடைத்து அதனுடன் சேர்த்து வறுக்க வேண்டும்.
சேமியாவின் நிறம் மாறும் நேரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
பால் கட்டியாகும் வரை காத்திருக்கவும் அதன் பின் சர்க்காரை மற்றும் கிஸ்மிஸ் பழத்தை சேர்த்து கொதிக்கும் வாராய் காத்திருக்கவும்.
ஒரு முறை கொதித்ததும் இறக்கி விட வேண்டும்.
ருசிமிகுந்த சேமியா பாயாசம் தயார்…!!