Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சேமியாவில் பதுக்கி வைத்த புகையிலை மாட்டியது எப்படி..?

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பேருந்து நிலையம் அருகே சேமியா மூட்டைகளுக்கு இடையே கேரளாவிற்கு ஒரு டன் புகையிலை பொருட்கள் கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லைப் பகுதியான கலியக்கவிலை பேருந்து நிலையம் அருகே அன்வர்  என்பவர் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள தன் வீட்டில் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி கேரளாவிற்கு கடத்துவதாக தக்கலை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் சேமியா மூட்டைகளுக்கு இடையில் பதுக்கி வைத்திருந்த ஒரு டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அனைவரையும் கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற திமுக பிரமுகர்களாக தோமஸ் குமார், ஷாஜஹான், செய்து அலி ஆகிய மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories

Tech |