Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

எல்லாரும் உங்க சம்பளத்தை அனுப்புங்க – OPS , EPS அறிக்கை …!!

கொரோனா நிவாரண நிதியாக அதிமுக சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் வைரஸ் 29 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மதுரையை சேர்ந்தவர் இறந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரும் இரண்டு நாள் கழித்து வீடு திரும்ப இருக்கின்றார்.

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கையாக தமிழக மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா பாதித்தவர்களுக்கு தமிழக அரசு ரூ. 3,780 கோடி சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க முதல்வர் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்த முதல்வர் 4,000 கோடி ரூபாய் கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் அதிமுக தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அதிமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மார்ச் மாதத்திற்கான சம்பளத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்க வழங்கவேண்டும்.

அதேபோல அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்ச ரூபாய்யும் கொரோனா நிவாரண நடவடிக்கைக்காக ஒதுக்கீடு செய்வார்கள் என்று அறிக்கை வெளியிடப்படுள்ளது.

Categories

Tech |