ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, மற்றும் ஜியோ பேமெண்ட் வங்கி ஆகிய முன்னணி வங்கிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது.
யுபிஐ ஆதரவு கொண்டு செயலி மூலம், வாட்ஸ் அப்பில் யார் வேண்டுமானலும் பணம் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மற்றும் யுபிஐ இணைந்து செயல்படுவது, கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் டிஜிட்டல் பொருளாதார பங்கேற்பு மற்றும் இதுவரை நிதிச்சேவை அணுகும் வசதி பெற்றிராதவர்களுக்கு நிதிச்சேவை அளிப்பது ஆகிய சவால்களை எதிர்கொள்ள உதவும் என்றும் வாட்ஸ் அப் குறிப்பிட்டுள்ளது.
வாட்ஸப்பில் எப்படி பணம் அனுப்புவது
வாட்ஸ் அப் செயலியை திறந்தவுடன், மேலே வலது பக்கம் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும். அதில் ‘பேமண்ட்ஸ்’ ‘Payments’ என்பதை கிளிக் செய்யலாம்.
இதே போல் செட்டிங்க்ஸ்-லும் ‘பேமண்ட்ஸ்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம். அடுத்து ‘Add payment option’ கிளிக் செய்து, உங்கள் வங்கிக்கணக்கு உள்ள வங்கியை தேர்வு செய்யவும்.
வங்கிக் கணக்கு விவரங்களை கொடுத்தவுடன், ஓடிபி மூலம் அது சரிப்பார்க்கப்படும். உங்களின் வாட்ஸ் அப் எண்ணும், வங்கியில் பதிவு செய்திருக்கும் எண்ணும் ஒன்றாக இருப்பது அவசியம்.
ஓடிபி ஊர்ஜிதம் செய்யப்பட்டப்பின் ’Done’ என்பதை க்ளிக் செய்யவும். அடுத்து உங்களின் யூபிஐ ஐடி-யை நீங்கள் பேமண்ட் ஆப்ஷனில் காணமுடியும். அதோடு இணைக்கப்பட்ட உங்களின் வங்கி விவரமும் அதில் வந்துவிடும்.
நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் சேட்டை திறந்து அதில், மெசேஜ் இடத்தில் இருக்கும் அட்டாச் பட்டனை க்ளிக் செய்தால், பல ஆப்ஷன்ஸ் வரும்.
அதில், ‘பேமண்ட்’ என்பதை கிளிக் செய்து, எவ்வளவு பணம் செலுத்துப்போகிறீர்கள் என்று பதிவிடவும். உங்களின் யூபிஐ ஐடி மற்றும் பின் பதிவிடவும்.
பேமண்ட் தொடங்கிவிடும். பேமண்ட் ஆனவுடன் மெசேஜ் வரும், பேமண்ட் பகுதியில் ஹிஸ்டரியில் அதன் விவரங்களை பார்க்கலாம்.