Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை”… நைசாக பேசி இளைஞனை புரட்டி எடுத்த புதுமைப்பெண்..!!

பெண்களுக்கு அடிக்கடி ஆபாச புகைப்படம் அனுப்பி தொந்தரவு கொடுத்த இளைஞரை தேனியை சேர்ந்த பெண்ணொருவர் லாபகரமாக பேசி அவரை பிடித்துள்ளார்.

தேனி மாவட்டம், பத்ரகாளி புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தோழி திண்டுக்கலில் வசித்து வருகிறார். அவர் தேனியை சேர்ந்த ஒரு நபர் பேஸ்புக் மூலம் ஆபாச படம் அனுப்பி தொல்லை தருவதாக இவரிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் ஆறுதல் கூறிய ராஜேஸ்வரி அந்த இளைஞரின் பேஸ்புக் முகவரியை வாங்கிக்கொண்டு அந்த இளைஞனுடன் நைஸாக பேசியுள்ளார்.

அந்த இளைஞனும் தன் வலையில் ஒரு பெண் விழுந்து விட்டார் என்று எண்ணி ராஜேஸ்வரி இடம் பேச்சுக் கொடுத்துள்ளார். அதன் பின் அந்த பெண்ணை பார்க்க அவரது வீட்டு முகவரியை வாங்கி கொண்டு நேரில் சென்றுள்ளார். திட்டமிட்டபடியே அனைத்தும் நடந்ததால் வீட்டிற்கு வந்த இளைஞனை ராஜேஸ்வரியின் கணவன் மற்றும் உறவினர்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

பின்னர் இது போன்று இனிமேல் நடக்காது என்று அந்த இளைஞன் கெஞ்சியதால், அவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அந்த இளைஞனை அடித்து அனுப்பிவிட்டனர். லாவகமாக செயல்பட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை பிடித்த பெண்ணிற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |