தன் மனைவியுடன் உல்லாசமாக இருந்த பக்கத்து வீட்டுக்காரரையும் மனைவியையும் இரும்பு கம்பியால் தாக்கிய கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூரில் உள்ள சூலூர் கள்ளபாளையம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த தம்பதியான சுதர்சன் மற்றும் சத்தியா கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உண்டு. அவர்கள் அருகில் ரஞ்சித் என்ற பீகார் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் வசித்து வருகிறார். ரஞ்சித்க்கும், சத்யாவுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த சுதர்சன் மனைவியை கண்டித்துள்ளார். இதற்கிடையில் ரஞ்சித் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று இருந்தார்.
பின்னர் திரும்ப வந்த அவர் சுதர்ஷன் இடம் நாம் சமாதானமாகி நண்பர்களாக இருப்போம் என கூறியுள்ளார். அதற்குப் பிறகு மூவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் சுதர்சன் கோழி கறி வாங்க சென்ற நிலையில் ரஞ்சித்தும் சத்யாவும் உல்லாசமாக இருந்துள்ளனர். கடைக்குச் சென்று திரும்பிய சுதர்சன் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் ஆத்திரமடைந்து கம்பியால் இருவரையும் தாக்கினார். இதில் சத்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரஞ்சித் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் சுதர்சன் அங்கிருந்து தப்பிவிட்டார். ரத்தவெள்ளத்தில் சத்யாவும் ரஞ்சித் கிடந்தனர். பின்னர் அவரை மீட்டு அவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சத்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள சுதர்சனை தேடி வருகின்றனர்.