Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“வங்கி லிங்க் அனுப்பி டாக்டரிடம் மோசடி”… 24 மணி நேரத்திற்குள்…. துரிதமாக செயல்பட்ட போலீசார்….!!!!!!

2 லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் துரிதமாக சைபர் க்ரைம் போலீசார் செயல்பட்டு பணத்தை மீட்டு ஒப்படைத்தார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இரண்டு நாட்களுக்கு முன்பாக இவரின் செல்போன் எண்ணிற்கு வங்கியிலிருந்து அனுப்புவது போல குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அந்த லிங்க் இணைப்பைத் தொட்ட போது வாங்கி செயலி பக்கத்திற்கு சென்று இருக்கின்றது.

அதில் அவரின் பான் கார்டு பதிவு செய்து செயலாக்கம் செய்ய முயன்ற போது ரகசிய எண் வந்திருக்கின்றது. அதனை பதிவு செய்ததில் 2 தவணைகளில் தலா 1 லட்சம் வீதம் ரூபாய் 2 லட்சம் எடுக்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றார். உடனடியாக போலீசார் அவர் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்ட பணத்தை பரிமாற்றம் செய்ய முடியாமல் தடை செய்தார்கள்.

தேசிய நிலையம் மூலமாக வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு பணத்தை தடுத்து நிறுத்தி டாக்டரின் வங்கி கணக்கிற்கு திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது‌. மோசடி செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பணம் திரும்ப பெறப்பட்டது. இதற்கான ஆவணத்தை டாக்டரிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டரிடம் ஆவணத்தினை வழங்கினார்.

Categories

Tech |