இந்திய பிரதமர் மோடிக்கு மதுரை மக்களவை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.பி சு. வெங்கடேசன் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை தன்னுடைய twitter பக்கத்தில் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, கொரோனா காலத்தின் போது ரயிலில் முதியோர்களுக்கான பயண சலுகை நிறுத்தப்பட்டது. இது நோய் பரவலை தடுப்பதற்காக நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது தடுப்பூசிகள் மூலமாக கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே முதியோர்களுக்கு ரயிலில் வழங்கப்பட்ட பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வற்புறுத்தப்படுகிறது. ஆனால் பயணிகளின் போக்குவரத்து வருவாய் மீண்டும் முந்தைய நிலைக்கு திரும்பி வரவில்லை எனக் கூறி அமைச்சர் மறுத்துவிட்டார். இந்நிலையில் ரயில்வே துறைக்கு 2021-22 ஆம் நிதி ஆண்டில் 45 ஆயிரம் கோடி வருமானமாக கிடைத்துள்ளது. அதன் பிறகு முன்பதிவு ரயில்களில் செல்லும் 63 லட்சம் முதியோர்கள் பயண சலுகைகள் இல்லாததால் பயணங்களை தவிர்த்து விட்டனர். முதியவர்களுக்கு பயணச்சலுகை அளிக்கப்பட்டதால் 1167 கோடி ரூபாய் வருமானம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பயணச்சலுகையை 12 கோடிக்கும் அதிகமான முதியவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இது சரக்கு போக்குவரத்து ரயில்களை ஒப்பிடும்போது மிகவும் குறைவான தொகையே ஆகும். சில நாடுகளில் முதியவர்களுக்கு இலவச பயணச் சலுகை வழங்கப்படுகிறது. எனவே குறைந்த பட்சம் முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லா பயணங்கள் படுக்கை வசதி, மூன்றடுக்கு குளிர்சாதன படுக்கை வசதி மற்றும் ஆகியவற்றுக்காகவது பயண சலுகையை அறிவியுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முதியோர் ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை.
பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம்தாழ்த்துகிறது இரயில்வே அமைச்சகம்.
பிரதமர் தலையிட்டு 12 கோடி முதியோர்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வழிசெய்ய வேண்டுகிறேன்.@PMOIndia @RailMinIndia pic.twitter.com/IE6fXsyJe5
— Su Venkatesan MP (@SuVe4Madurai) October 15, 2022