Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி காலமானார்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி காலமானார். 

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர்  ஜெய்பால் ரெட்டி.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இவர் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஜெயபால் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள கச்சிபவுலி என்ற பகுதியில் உள்ள ஆசிய கேஸ்டிரோஎன்டிராலஜி  மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Image

இந்நிலையில் இன்று அதிகாலை 1 30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இவருக்கு மனைவியும் இரட்டையர்களான மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மறைந்த  அவரது உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Image

கடந்த 1942 ஆம் ஆண்டு பிறந்த ஜெய்பால் ரெட்டி,  1942ஆம் ஆண்டு உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் மாணவர் தலைவராகவும் இருந்துள்ளார். அதன் பின் தான் அரசியலில் களம் இறங்கிய இவர்  1970 -ஆம் ஆண்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏவானார். பின்னர் ஜனதா தளம் கட்சியில் இணைந்த அவர் குஜ்ரால் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராக பதவி வகித்தார். அதே போல ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் அமைச்சராக இருந்துள்ளார்.

Categories

Tech |