Categories
தேசிய செய்திகள்

மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு ரூ.1 கோடி உதவி: ப.சிதம்பரம்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான பி.சிதம்பரம் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ.1 கோடியை மும்பை செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார். தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றாக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதியாகியுள்ளது.பிம்ப்ரி- சின்ச்வாட்டில் 19, மும்பையில் 11, அகமதுநகர், சதாரா மற்றும் வசாய் ஆகிய இடங்களில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் மொத்த நேர்மறை பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 781 ஆக உள்ளது.

மேலும், மும்பையில் மட்டும் தற்போது புதிதாக 57 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, மும்பையில் மட்டும் இறப்புகள் உட்பட 490 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிஎம்சி கூறியுள்ளது. இந்த நிலையில் தான் கொரோனாவுக்கு உரிய சிகிச்சை அளித்து வரும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எம்.பி நிதியில் இருந்து ரூ.1 கோடி பணம் வழங்கியுள்ளார்.

Categories

Tech |