முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான எம்.வி. ராஜசேகரன் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். ராஜசேகரன், கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் இருக்கும் மரலவாடி என்ற கிராமத்தில் 1928ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார். 91 வயதான ராஜசேகரன் கிரிஜா என்ற மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் கவனிப்பில் இருந்து வந்தார். வயது முதிர்வு காரணமாக அவருக்கு நீண்டகாலமாக உடல் பிரச்னைகள் இருந்தது.
இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், இன்று அவர் உயிர் பிரிந்தது.
இவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “எம்.வி. ராஜசேகரன் பணிவு, எளிமை, மிகுந்த முதிர்ச்சி கொண்ட அரசியல்வாதி. அவர் மக்களவையில் கனகபுரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
மத்திய புள்ளிவிவர அமைச்சராக இருந்தப்போது திட்டமிடல் அரசியலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தார். அவரின் ஆத்மா இறைவன் காலடியில் இளைப்பாறட்டும். அவரின் மறைவு ஒரு பேரிழப்பு. அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், அவரின் ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என கூறியுள்ளார். மறைந்த ராஜசேகரன், கர்நாடக முன்னாள் முதல்வர் நிஜலிங்கப்பாவின் மருமகன் என்பது நினைவுக் கூரத்தக்கது.
ಆತ್ಮೀಯರು,ಕೇಂದ್ರದ ಮಾಜಿ ಸಚಿವರಾಗಿದ್ದ ಎಂ ವಿ ರಾಜಶೇಖರನ್ ಅವರ ನಿಧನ ದುಃಖಕರ.
ಸರಳ, ಸಜ್ಜನಿಕೆಗಳ ಎಂ ವಿ ಆರ್ ಅವರ ಅಗಲಿಕೆಯಿಂದ ಮೌಲ್ಯಾಧಾರಿತ ರಾಜಕಾರಣಿಯೊಬ್ಬರನ್ನು ಕಳೆದುಕೊಂಡಂತಾಗಿದೆ.
ಭಗವಂತನು ಅವರ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ ನೀಡಲಿ, ಅವರ ಕುಟುಂಬ ವರ್ಗಕ್ಕೆ ಈ ನೋವನ್ನು ಭರಿಸುವ ಶಕ್ತಿ ನೀಡಲಿ ಎಂದು ಪ್ರಾರ್ಥಿಸುತ್ತೇನೆ.
— B.S.Yediyurappa (@BSYBJP) April 13, 2020