Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சீனியர்க்கு ரெஸ்ட் கொடுத்துட்டு “…. ‘இவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கனும்’ ….. முன்னாள் வீரர் சேவாக் கருத்து …..!!!

நியூசிலாந்துக்கு அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சேவாக் வலியுறுத்தியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இதில் வருகின்ற 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் டி20 போட்டி நடைபெறுகிறது. இதையடுத்து 25ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டியும் ,டிசம்பர் 3-ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. இத்தொடருக்கான நியூஸிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறும்போது, “அடுத்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டிக்கு அணியை இப்போது தயார் செய்ய வேண்டும்.

தற்போது இந்திய அணியில் உள்ள கேஎல் ராகுல் ,இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த டி20 உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட வேண்டும். அதோடு இளம் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர்  ஆகியோருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதனால் நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்க வேண்டும் .அதோடு உள்ளூரில் விளையாட இருப்பதால் வீரர்களுக்கு சில அனுபவங்கள் கிடைக்கும் .அதற்கேற்ற வகையில் அணியை தயார் செய்ய வேண்டும் .அதோடு  சில வீரர்கள் ஆறு மாதங்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கிறார்கள் இதனால் சில சமயம் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இதன் காரணமாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் “என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |