குடியிருப்பு பகுதிக்குள் செந்நாய்கள் கூட்டமாக உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் இருக்கும் எச். பி. எப் குடியிருப்பு பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குளிர்ந்த காலநிலை இருப்பதால் செந்நாய்கள் இப்பகுதிக்குள் நுழைந்து விட்டன. இதனையடுத்து செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக அப்பகுதியில் உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் குடிக்க வந்த கடமான்களை செந்நாய்கள் கொன்றுள்ளது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும் போது குடியிருப்பு பகுதிக்குள் கூட்டமாக உலாவரும் செந்நாய்களை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.