கேரள மாநிலம் வடசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் கழுத்தில் ரத்த காயங்களுடன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த இளம்பெண்ணின் பெற்றோர் தன்னுடைய மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் கூறியதாவது, இளம்பெண் எப்போதும் பேஸ்புக்கில் இருந்துள்ளார். அதோடு பல மணி நேரம் சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த கோபு என்பவருடன் இளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் இரவு வெகு நேரமாக இளம்பெண் ஆன்லைனில் இருப்பதால் கோபுவுக்கு இளம்பெண் வேறு யாருடனாவது பேசுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் பேஸ்புக்கில் அகில் என்ற வாலிபர் இளம்பெண்ணுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க அவருடன் சாட்டிங் ஈடுபட்டுள்ளார். அகில் சிறுமியிடம் உன்னை காதலிப்பதாக கூற இளம்பெண்ணும் உடனே நானும் உன்னை காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். இநிநிலையில் அகில் இளம்பெண்ணிடம் உன்னை நேரில் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் பெற்றோருக்கு தெரியாமல் வீட்டின் கதவை திறந்து அகிலை பார்க்க சென்றுள்ளார். அங்கு சென்று இளம்பெண்ணுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது காதலியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் கோபு தான் அகில் போன்று மெசேஜ் செய்துள்ளார். ஆனால் இளம்பெண் அகில் மற்றும் கோபு இருவரையும் காதலிப்பதாக கூறியதால், ஆத்திரமடைந்த கோபு இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஒரே நேரத்தில் பல பேருடன் பழகி கடைசியில் இளம்பெண் உயிரை விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.