அமைச்சர் கே.என் நேரு கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியில், இன்றைக்கு கிறிஸ்துவ பேராயர்கள், இஸ்லாமிய பெருமக்கள் எல்லோரும் உரையாற்றினார்கள். இந்த அரசு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்கின்ற அரசாக நடந்து கொண்டிருக்கிறது என்று…. நான் சேலத்தில் சொன்னது போல் சொல்கிறேன்… இங்கு வந்திருக்கிறவர்களுக்கு…. இந்த அரசு உங்களுடைய அரசாக…. நிச்சயமாக இந்த பகுதியில் இருக்கின்ற இஸ்லாமிய பெருமக்களுக்கு நான் சொல்கிறேன்….
பாராளுமன்றத்திலே எந்த சட்டம் கொண்டு வந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகம்… தளபதி அவர்கள் சிறுபான்மை மக்களுக்காக இருப்பார் என்பதை நான் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தது. 10% உயர் ஜாதிகாரர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று… உடனடியாக நீதிமன்றத்திற்கு சென்று தடை ஆணை பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறார் முதலமைச்சர். நான் சொல்வது கிட்டத்தட்ட இந்த அரசாங்கம் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்ற விவரத்தை சொல்ல விரும்புகிறேன்…
சிறுபான்மையினர் மக்கள் மட்டுமல்ல, ஏழை எளியவர்களுக்கு மட்டும் அல்ல, இந்த நகரத்தில் மட்டுமல்ல, சென்னை நகரத்தில் மட்டுமல்ல, 21 மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றது. 138 நகராட்சிகள் இருக்கிறது, 491 பேரூராட்சிகள் இருக்கிறது, எனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. என்னுடைய இலக்காவில் அனைத்து இடங்களிலும் இப்போது கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் செலவில் பணிகளை தொடங்க சொல்லி ஆணையிட்டு,
ஒவ்வொரு பகுதிகளிலும் தேவையான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு நாங்கள் இருக்கிறோம். அதை காட்டிலும், அனைத்து மக்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று சொல்லி 31,000 கோடி செலவில் அந்த திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்.