சொத்துக்குவிப்பு வழக்கில் சுதாகரன் தண்டனை முடிந்ததும் 10 கோடி அபராதம் செலுத்தாத நிலையில் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்றனர். சசிகலாவும் இளவரசியும் கடந்த நவம்பர் மாதம் தங்களுக்கு விதிக்கப்பட்ட 10 கோடியே 10 லட்சத்து 50 ஆயிரத்தை செலுத்தின. இதையடுத்து ஜனவரி 27ஆம் தேதி சசிகலாவும், பிப்ரவரி 5ஆம் தேதி இளவரசியும் விடுதலை செய்யப்பட்டார். ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன் இன்னும் சிறையில் உள்ளார்.
இவ்வழக்கில் அவர் தண்டனை காலம் செப்டம்பரில் நிறைவடைந்தது. ஆனால் 10 கோடியே 10 ஆயிரத்தை செலுத்தாததால் விடுதலை செய்யப்படவில்லை. சுதாகரனுக்கு நெருக்கமான உறவினர்கள் ஒருவர் கூறும்போது, சசிகலா மூலம் ஜெயலிதாவுக்கு அறிமுகமானவர். அவரது வளர்ப்பு மகன். சுதாகரன் தமிழகமே மிரளும் அளவுக்கு, பல கோடி ரூபாய் செலவிட்டு திருமணம் நடந்தது. அது அவருக்கு வினையாக அமைந்தது.
சுதாகரன் தனது பெயரில் நற்பணி மன்றத்தை தொடங்கி சின்ன எம்ஜிஆர் என்று வலம் வந்தார். அது ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை. அவரது கோபத்திற்கு ஆளானார். வீட்டை விட்டும் வெளியேறினார். அதேபோல சகோதரனான டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் சுதாகரனை ஒதுக்கிவிட்டனர். கடந்த 4 ஆண்டுகாலமாக சுதாகரனுக்கு எந்தவித சலுகையும் தரப்படவில்லை. மாதத்துக்கு இருமுறை சசிகலாவும், இளவரசியும் சிறைக்குப் போய் பார்த்த உறவினர்கள் சுதாகரனை பார்க்கவில்லை.
அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் ஒரு முறை பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுதனர்எந்த உறவால் ஆடம்பரமும் அதிகாரமும் கிடைத்ததோ, அதே உறவால் அவருக்கு தண்டனையும் கிடைத்துவிட்டது. எந்த உறவினரால் தண்டனைக்கு ஆளானாரோ, அவர்களே அவரை கைவிட்டு விட்டனர். ஏராளமான சொத்துக்களை வைத்துள்ள குடும்பத்தினருக்கு 10 கோடி என்பது மிகவும் சாதாரணம். டிடிவி தினகரன், பாஸ்கரன் சகோதரரை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.