ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த சமயத்தில் சட்டசபையில் கிண்டல் செய்தது, செந்தில் பாலாஜியின் மனதில் வடுவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டின் நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் கோவை சாரமேடு பகுதியில் 25.50 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை அமைக்க கூடிய பணி அமைச்சர் செந்தில்பாலாஜியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்பின்பு அவர் பேசியதாவது, கோவை மாநகராட்சியில் பல வருடங்களாக புதுப்பிப்பு செய்யப்படாமல் இருக்கும் சாலைகளை கணக்கீடு செய்து அவற்றை மக்களுக்கு ஏற்ற வகையில் புது தார் சாலைகளாக அமைப்பதற்கான பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முதல்வர் முக ஸ்டாலின் 200 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருக்கிறார். கடந்த ஆட்சி காலத்தில் மாநகராட்சியில் அதிகமான முறைகேடுகள் நடந்திருக்கிறது. அவைகளை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாக கடந்த ஆட்சி காலத்தில் என்னவெல்லாம் நடந்தது? என்று தெரிந்துகொண்டு வெளியிட வேண்டும்.
அவர்கள் செய்த திட்டங்களை மறந்து அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அந்த ஆட்சி காலத்தில் முறைகேடு நடந்திருக்கிறது. அதாவது, கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் செந்தில்பாலாஜி திமுகவின் எம்எல்ஏ வாக இருந்தார். அப்போது, அவர் சட்டசபையில் பேசும்போது, “யாரையும் கும்பிட்டு, தலைவர் பதவியை வாங்கவில்லை.
குழந்தையை போல் தவழ்ந்து பதவியை வாங்கவில்லை. தமிழகத்தின் வருங்காலம் ஸ்டாலின்” என்று கூறினார். அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஓ பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் காலில் இருக்கும் ஸ்கேட்டிங் சக்கரத்தை கழற்றிவிட்டு அவரை அமர வையுங்கள். செந்தில் பாலாஜி பணிந்து பணிந்து பதவி பெற்ற புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது” என்று கூறினார்.
அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் கைதட்டி சிரித்தார்கள். இது செந்தில் பாலாஜி மனதில் காயத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியை கைப்பற்றிய பின் செந்தில்பாலாஜி மின்துறை அமைச்சர் ஆகிவிட்டார். எனவே, ஓ. பன்னீர் செல்வத்தை பழி வாங்கும் நோக்கில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.