Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப். 1 முதல் எது உண்டு? எது இல்லை? அதிரடி தகவல் …!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

பொது ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகத்தின் இயல்பு நிலை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வரும் 31ம் தேதியுடன் பொது முடக்க முடியும் நிலையில் செப்டம்பர் மாதத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடை சிறிது நேரத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது, மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளில் என்ன இயங்கும் ? என்ன இயங்காது ?  என்பது குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளன

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அரசு நூலகங்கள் இயங்கும். காலை 8 மணி முதல் 2 மணி வரை இயங்கும். இதில் 65 வயதுக்கு மேல் அனுமதி இல்லை என்று சொல்லப்படுகின்றது.

பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டும் உண்டு. வைரஸ் தொற்று குறைந்தால் தான் பள்ளிகள் திறப்பு.

பூங்கா, சுற்றுலா தளங்கள் திறப்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை.

தியேட்டர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் ஏசி இல்லாமல் 50 சதவிகித இருக்கையுடன் அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு அதற்கான வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

எந்த முடிவும் உறுதியான முடிவு திடமான முடிவு எடுக்கப்படவில்லை தியேட்டர்கள் திறப்பது

பெரிய வணிக வளாகங்கள் செயல்பாட்டிற்கு தற்போது அனுமதி இல்லை. ஆனால் விரைவில் பல கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம். செப்டம்பர் 15ஆம் தேதிக்கு பிறகு வாய்ப்பு கொடுக்கப் படலாம் எனவும், குறிப்பிட்ட நபர்களை மட்டும்தான் அனுமதிக்கப் படுவார்கள் என பல்வேறு கட்டுப்பாடுகள் நிபந்தனைகளுடன் அனுமதிக்கப் பட வாய்ப்பு இருக்கிறது.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு போக்குவரத்து செல்வதற்கு வாய்ப்புகள் இல்ல. மண்டலங்களுக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படும்.அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் தற்போதைக்கு இல்லை.

மாவட்டத்திற்கு உள்ளேயே இயங்கும் பஸ் போக்குவரத்திற்கு அனுமதிக்கப் பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது. முழுவீச்சில் அனைத்து போக்குவரத்தையும் இயக்காமல் குறைந்த அளவு போக்குவரத்து இயக்க… மக்களுக்கு தேவைக்கு ஏற்ப பேருந்துகள் அனுமதிக்க படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

ரயில் மெட்ரோ ரயில் இயக்கம் தற்போதைக்கு இருக்க வாய்ப்பு குறைவு. சரக்கு ரயில் போக்குவரத்து அதிகரிக்கப்படலாம்.

பெரிய வழிபாட்டுத்தளம் பல கட்டுப்பாடுகளுடன்,  நிபந்தனைகளுடன் அனுமதி தர வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்தாக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இது அனைத்துமே உறுதியான தகவலாக இல்லை என்றாலும் பேசப்பட்ட வரும் தகவலாக இருக்கின்றது. எதுவானாலும் இன்று முதல்வர் எடுக்கும் முடிவில் தான் இருக்கின்றது.

Categories

Tech |