Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

செப். 1 முதல் எது உண்டு? எது இல்லை? அதிரடி தகவல் …!!

தமிழகத்தில் பொதுமுடக்கத்தின் 4ஆம் கட்ட கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்து முதலமைச்சர் பழனிசாமி  அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் 1-ம் தேதி மாவட்டத்திற்குள்ளான பொது போக்குவரத்துக்கு அனுமதி. மாவட்டத்திற்குள் அரசு, தனியார் பேருந்துகள் இயங்கும்.  மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்திற்கு தடை நீடிக்கிறது. திரையரங்குகள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட தடை நீடிக்கிறது. விளையாட்டு மைதானங்கள், பூங்காங்கள் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி.

செப்டம்பர் 30-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள்,ஆராய்ச்சி நிறுவனங்கள், செயல்படத்தடை தொடரும். நாளை மறுநாள் முதல் சென்னையில் பஸ்கள் ஓடும். மாவட்டத்திற்குள் பொதுபோக்குவரத்திற்கு அனுமதி. ஞாயிற்றுகிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழுமுடக்கம் செப்டம்பர் மாதம் முதல் ரத்து. சுற்றுலாதலங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் இ-பாஸ் பெற வேண்டும்.

தமிழகத்தில் உணவகங்கள், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8 மனி வரை இயங்க அனுமதிக்கப்படும். திறன் மற்றும் தொழில் பயிற்சி நிறுவனங்கள் செப்டம்பர் 21-ம் தேதி முதல் திறக்க அனுமதி. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறை ரத்து. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் இல்லை.வெளிநாடு, வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு வருவதற்கு இ பாஸ் நடைமுறை தொடரும்.

வணிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவிகித பணியாளர்களிடன் இயங்க அனுமதி. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் இயங்க அனுமதி. சமுதாய, பொழுதுபோக்கு, ஊர்வலங்கள் நடத்த விதிக்கப்பட்ட தடை தொடரும். ஐ.டி. நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. இருப்பினும் தவிர்க்க இயலாத பணி தவிர பிற பணியாளர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.சென்னையில் அரசுப் பேருந்து சேவை செப்.1 முதல் வழிகாட்டு நடைமுறைகளுடன் அனுமதி.

சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து 7ஆம் தேதி முதல் தொடங்கும். மின்சார ரெயில்சேவைகளுக்கான தடை தொடரும். பெரிய வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு செல்லும் வெளியூர் பயணிகளுக்கு இ-பாஸ் உண்டு. சினிமா சூட்டிங் அனுமதி – பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.

செப். 1ஆம் தேதி முதல் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும். தனியார், அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் கொரோனா தடுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். வங்கிகள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல்  கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி.வெளிமாநிலங்களில் இருந்து தினமும் 50 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி. தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே  இ-பாஸ் முறை ரத்து செய்யப்படும். செப்டம்பர் 30ம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |