Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தனி வீடு….. வாடகைக்கு எடுத்து…. அடுத்தவன் மனைவியுடன் உல்லாசம்…. கணவன் தற்கொலை…. கிராம நிர்வாக அதிகாரி கைது….!!

மனைவியின் கள்ளக் காதலால் ஏற்பட்ட அவமானத்தால்  கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உப்புத்துறை பாளையத்தில்  வசித்து வருபவர் வேலுச்சாமி. இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா தாராபுரம் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வேலுச்சாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து சுதாவின்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் அவரது வீட்டில் இருந்து கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் மாம்பாடி கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் என்பவர் தான் எனது மரணத்திற்கு காரணம் என்று அவர் எழுதி வைத்திருந்தார்.

அதன்படி மேற்கொண்ட விசாரணையில் சுரேஷுக்கும் வேலுச்சாமியின் மனைவி சுதா ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை அறிந்த வேலுச்சாமி சுதாவை பலமுறை கண்டித்தும் திருந்தாததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுதா வேலுச்சாமியை விட்டு பிரிந்து  வாடகை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கல்லதொடர்பு மேலும் நீட்டிக்க வேலுச்சாமியிடம் நேரடியாக சிலர் மனைவியின் கள்ளத் தொடர்பு குறித்து விசாரித்து கேலி செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த வேலுச்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |