Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தனி… தனி சம்பவம்….. ஏரியில் மூழ்கி….. மாணவி உட்பட 2 பேர் பலி….!!

விழுப்புரம்  அருகே இருவேறு இடங்களில் பள்ளி மாணவி மற்றும் மீனவ தொழிலாளி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்பேத்கார் காலனியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பிரியதர்ஷினி அவரது தோழி ஒருவருடன் பாக்கம் ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்ற போது  ஏரிக்குள் இறங்கி மீன்பிடித்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கிய சிறுமிகள் இருவரும் நீரில் மூழ்கினர்.

அப்போது அருகில் குளித்துக் கொண்டிருந்த சிலர் இதை பார்த்ததும் மாணவிகளை உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றனர். ஆனால் பிரியதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க, அவரது தோழிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க அதே செஞ்சிப் பகுதியில் கடலாடி தாங்கல்  கிராமத்தைச் சேர்ந்த மரியசூசை என்பவர் மேல்பாப்பம்பாடியில் உள்ள ஏரிக்கு மீன்பிடிக்க சென்று இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக படகிலிருந்து ஏரியில் கவிழ்ந்து விழுந்து அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவேறு இடங்களில் மாணவி, மீனவ தொழிலாளி ஆகியோர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |