தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் , சுகாதாரத்துறை செயலாளர் என அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையை மிக தீவிரமாக மேற்பார்வை செய்து வரும் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று மட்டும் 4 முறை செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு நடவடிக்கைகளை குறித்து தெரிவித்தார். சென்னை எழும்பூரில் பேசிய அவர் , தமிழகத்தில் ஒருவர் மட்டுமே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். சந்தேகம் உள்ள 1,137 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மத்திய அரசின் அறிவுறுத்தல் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 72 ரத்த மாதிரிகள் 61 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தோப்பூர், தாம்பரம் ,திருச்சி கோவை என 4 இடங்களிலும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மதுரை , திருநெல்வேலியில் பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.