Categories
உலக செய்திகள்

பிரிக்கப்பட்ட அகதி குழந்தைகள்… பெற்றோருடன் சேர்க்க நடவடிக்கை… களமிறங்கும் ஜோ பைடன் மனைவி…!

அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜில் பைடன் இறங்கியுள்ளார்.

அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். அவரது மனைவியான ஜில் பைடன் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிந்த குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை ஒன்றிணைக்க ஜோ பைடன் செய்யும் முயற்சிகளில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியதாவது, பிரிக்கப்பட்ட குடும்பங்களையும், குழந்தைகளையும் ஒன்று சேர்ப்பதற்காக ஓர் பணிக் குழுவை தொடங்கப் போவதாக ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார். இதில் பங்கேற்க அவரது மனைவி ஜில் பைடன் ஆர்வமாக உள்ளார் என்றார். இதுவரை 2500 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோருடன் சேர்க்க அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |