விழுப்புரத்தை மாநகராட்சியாக அறிவிக்க கோரியும், பல்வேறு வளர்ச்சி பணிகளை செயல்படுத்திட கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த பின்பு அதன் ஊராட்சி எல்லைப்பகுதிகளை வரையறுப்பதற்கான கருத்து கேட்பு கூட்டமானது நேற்றைய தினம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமை வகிக்க, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகித்தார். மேலும் எம்பி எம்எல்ஏக்கள் கட்சியின் முக்கிய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்நிலையில் எல்லைகள் வரையறுக்கப்பட்ட பின் அப்பகுதி எம்பி மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார். அதில், விருதுநகர் நகராட்சி ஆரம்பிக்கப்பட்டு நூற்றாண்டை கடந்து விட்டது. இந்த சமயத்தில் அதனை மாநகராட்சியாக அறிவித்தால் பொருத்தமானதாக இருக்கும். மேலும் இந்தியாவில் சர்வதேச நகரமாக கருதப்படும் ஆரோவில் நமது விழுப்புரம் மாவட்டத்தில் தான் இருக்கிறது. அங்கே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருடம்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதுமான வளர்ச்சி பணி என்பது இல்லை. ஆகையால் விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து அதனை சுற்றியுள்ள பகுதிகளை பேரூராட்சியாக அறிவித்து பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கிட கோரி வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது முதல் கருத்து கேட்பு கூட்டம் என்பதால் எல்லை வரையறை மட்டும் செய்யப்பட. அடுத்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.