இயற்கை மருத்துவ படிப்பில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருந்து வந்ததால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பில் சேருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தனியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்பிற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் பூர்த்தி அடைந்து ஆன்லைன் வகுப்புகள் பல இடங்களில் தொடங்கப்பட்டு விட்டன.
இந்த சூழ்நிலையில், பல கல்வித்துறைகள் மாணவர்களுக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2020-21 ஆம் ஆண்டிற்கான யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர மாணவர்களுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த படிப்பில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 12ம் தேதி வரை www .tnhealth. Tn. gov. In என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்டம்பர் 15ஆம் தேதி மாலை ஐந்து முப்பது மணிக்குள் சமர்ப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.