இன்றைய தினம் : 2019 செப்டம்பர் 16
கிரிகோரியன் ஆண்டு : 259_ஆம் நாளாகும்.
நெட்டாண்டு : 260_ஆம் நாள்
ஆண்டு முடிவிற்கு : 106 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்:
307 – மேற்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் செவரசு கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கொல்லப்பட்டார்.
681 – திருத்தந்தை முதலாம் ஒனோரியசு பதவி நீக்கப்பட்டார்.
1732 – போர்த்துகல், காம்போ மையோர் நகரில் சூறாவளி தாக்கியதில் நகரின் மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
1810 – மிகுவேல் இடால்கோ என்ற மதகுரு எசுப்பானியாவிடம் இருந்து மெக்சிக்கோவின் விடுதலைப் போரை ஆரம்பித்தார்.
1893 – அமெரிக்காவின் ஓக்லகோமா மாநிலத்தில் செரோக்கீ என்ற இடத்தில் விற்பனைக்கு விடப்பட்ட நிலப்பரப்புகளை வாங்குவதற்கு குடியேறிகள் பெருமளவில் திரண்டனர்.
1914 – முதலாம் உலகப் போர்: போலந்து மீதான தாக்குதல் ஆரம்பமானது.
1920 – நியூயோர்க் நகரில் ஜே.பி.மோர்கன் கட்டிடத்தின் முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலி எகிப்தின் சிதி பரானி நகரைக் கைப்பற்றியது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானின் ஆங்காங் மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது.
1955 – அர்கெந்தீனாவின் அரசுத்தலைவரைப் பதவியில் இருந்து அகற்ற அங்கு இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1956 – ஆத்திரேலியாவின் முதலாவது தொலைக்காட்சி சேவை டிசிஎன் ஆரம்பமானது.
1959 – முதலாவது வெற்றிகரமான ஒளிநகலி செராக்சு 914 நியூயார்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1961 – சப்பான், ஒசாக்காவில் சூறாவளி நான்சி தாக்கியதில் 173 பேர் உயிரிழந்தனர்.
1961 – பாக்கித்தான் அப்துஸ் சலாம் தலைமையில் விண்வெளி ஆய்வு ஆணையத்தை நிறுவியது.
1963 – மலாயா கூட்டமைப்பு, சிங்கப்பூர், வடக்கு போர்ணியோவின் சபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது. ஆனாலும் சிங்கப்பூர் விரைவில் விலகி தனி நாடாகியது.
1970 – யோர்தானில் நான்கு பயணிகள் விமானங்கள் பாலத்தீனப் போராளிகளால் கடத்தப்பட்டதை அடுத்து மன்னர் உசைன் இராணுவ ஆட்சியை அறிவித்தார்.
1975 – முதலாவது இடைமறித்துத் தாக்கும் போர் வானூர்தி மிக்-31 தனது முதல் பறப்பை மேற்கொண்டது.
1975 – கேப் வர்டி, மொசாம்பிக், சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1975 – பப்புவா நியூ கினி, ஆத்திரேலியாவிடமிருந்து விடுதலை பெற்றது.
1978 – ஈரானில் தபாசு நகரை 7.4 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 15,000 பேர் உயிரிழந்தனர்.
1979 – கிழக்கு செருமனியில் இருந்து எட்டுப் பேர் வெங்காற்று மிதவையில் ஏறி மேற்கு செருமனிக்குத் தப்பிச் சென்றனர்.
1982 – லெபனானில் சப்ரா, சட்டீலா ஆகிய பாலத்தீன அகதி முகாங்களில் லெபனானிய இராணுவத் துணைப்படையினரால் ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
1987 – ஓசோன் படலத்தைப் பாதுகாக்கும் பிரகடனம் மொண்ட்றியால் நகரில் அறிவிக்கப்பட்டது.
1990 – சீனாவுக்கும் கசக்ஸ்தானுக்கும் இடையே தொடருந்து சேவை ஆரம்பமானது.
1992 – பனாமாவின் முன்னாள் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவுக்கு எதிரான போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுக்கான விசாரணைகள் ஐக்கிய அமெரிக்காவில் நிறைவடைந்து,. அவருக்கு 40-ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
1994 – சின் பெயின், மற்றும் அயர்லாந்து துணை இராணுவக் குழுக்கள் மீது 1988 இல் விதிக்கப்பட்ட ஒலிபரப்புத் தடையை பிரித்தானிய அரசு விலக்கிக் கொண்டது.
2000 – இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவரும் அமைச்சருமான எம். எச். எம். அஷ்ரப் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார்.
2002 – விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கா அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தாய்லாந்தில் ஆரம்பமாயின.
2007 – தாய்லாந்தில் 128 பேரை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று வீழ்ந்ததில் 89 பேர் உயிரிழந்தனர்.
2013 – வாசிங்டன் கடற்படைத் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றைய தின பிறப்புகள் :
1859 – யுவான் ஷிக்காய், சீனக் குடியரசின் அரசுத்தலைவர் (இ. 1916)
1884 – சிவகங்கை இராமச்சந்திரன், வழக்கறிஞர், திராவிட சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் (இ. 1933)
1893 – ஆல்பர்ட் செண்ட்-ஜியார்ஜி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-அமெரிக்க மருத்துவர் (இ. 1986)
1916 – எம். எஸ். சுப்புலட்சுமி, இந்திய கருநாடக இசைப் பாடகர், நடிகை (இ. 2004)
1922 – கி. ராஜநாராயணன், தமிழக எழுத்தாளர்
1923 – லீ குவான் யூ, சிங்கப்பூரின் 1வது பிரதமர் (இ. 2015)
1933 – வி. சிவசாமி, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2014)
1933 – ரா. பாலகிருஷ்ணன், தமிழக எழுத்தாளர்
1939 – பி. எம். எ. சாகுல் ஹமீது, மலேசிய எழுத்தாளர்
1945 – ப. சிதம்பரம், இந்திய அரசியல்வாதி
1950 – மாலன், இந்திய எழுத்தாளர், ஊடகவியலாளர்
1959 – ரோஜா ரமணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1966 – அசங்க குருசிங்க, இலங்கைத் துடுப்பாளர்
1974 – யூலியன் காசுட்ரோ, அமெரிக்க அரசியல்வாதி
1976 – மீனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இன்றைய தின இறப்புகள் :
655 – முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை)
1394 – எதிர்-திருத்தந்தை ஏழாம் கிளமெண்ட் (பி. 1342)
1701 – இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (பி. 1633)
1736 – டானியல் பேரென்கைட், போலந்து-டச்சு இயற்பியலாளர், வெப்பமானியைக் கண்டுபிடித்தவர் (பி. 1686)
1925 – அலெக்சாந்தர் பிரீடுமேன், உருசிய இயற்பியலாளர் (பி. 1888)
1931 – உமர் முக்தார், லிபியக் கல்வியியலாளர் (பி. 1862)
1932 – ரொனால்டு ராஸ், நோபல் பரிசு பெற்ற இந்திய-ஆங்கிலேய மருத்துவர் (பி. 1857)
1946 – ஜேம்சு ஆப்வுட் ஜீன்சு, ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1877)
1973 – விக்டர் அரா, சிலியப் பாடகர் (பி. 1932)
1980 – ஜீன் பியாஜே, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (பி. 1896)
1998 – கோ. கேசவன், எழுத்தாளர், மார்க்சிய ஆய்வாளர் (பி. 1946)
2000 – எம். எச். எம். அஷ்ரப், இலங்கை அரசியல்வாதி (பி. 1948)
2007 – ராபர்ட் ஜோர்டான், அமெரிக்கப் பொறியியலாளர், எழுத்தாளர் (பி. 1948)
2009 – தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழகப் பேச்சாளர், எழுத்தாளர்
2009 – மீனாட்சி முகர்சி, ஆங்கில இலக்கிய அறிஞர், புதின ஆசிரியர்
2012 – லூசு மோகன், இந்திய நடிகர் (பி. 1928)
2016 – எட்வர்ட் ஆல்பீ, அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் (பி. 1928)
2017 – அர்ஜன் சிங், இந்திய வான்படைத் தளபதி (பி. 1919)
இன்றைய தின சிறப்பு நாள் :
விடுதலை நாள் (பப்புவா நியூ கினி, ஆத்திரேலியாவிடமிருந்து, 1975)
பன்னாட்டு ஓசோன் படலப் பாதுகாப்பு நாள்
மலேசியா நாள் (மலேசியா, சிங்கப்பூர்)