மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்ட முன்வரைவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து செப்டம்பர் 28ஆம் நாள் முதல் நாடு தழுவிய பிரச்சார இயக்கம் தொடங்கப் போவதாக தேசிய மீனவர் பேரவை அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த சட்ட முன்வரைவுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தேசிய மீனவர் அமைப்பின் நிர்வாகிகள் கூட்டம் நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் சங்கத்தினர் புதிய வேளாண் சட்ட முன்வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு எதிரான சட்டங்களை கண்டித்தும் செப்டம்பர் 28ஆம் நாள் கன்னியாகுமரியிலிருந்து பரப்பூரில் தொடங்க இருப்பதாக அறிவித்தனர்.
புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் தொடங்கும் உள்ள பரப்புரை இயக்கத்தில் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், மீனவர் இயக்கங்களை ஒருங்கிணைத்தும் நவம்பர் 10ஆம் நாள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.