முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான சேரனுக்கு தற்போது நடந்து வரும் படப்பிடிப்பின்போது கால் தவறி கீழே விழுந்து தலையில் 8 தையல் போட்டிருந்தாலும் கூட தன்னுடைய படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 1997 இயக்குனராக அறிமுகமான சேரன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் நடிகராகவும் நடித்து தன்னுடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதன்பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து விளையாடி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளார்.
இதனையடுத்து இவர் தற்போது கௌதம் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பாக திண்டுக்கல்லில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் சேரன் வீட்டின் மேல் ஏறி நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
அவ்வாறு நிற்கும்போது சேரன் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுமார் 8 தையல்கள் போடப்பட்டுள்ளது. இதனையும் பொருட்படுத்தாமல் சேரன் தொடர்ந்து தனது நடிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளார்.