Categories
சினிமா தமிழ் சினிமா

“கொரோனா” பறவைக்கு சோறு கொடுக்க சொல்லுங்க… சேரன் ட்விட்….!!

ஊரடங்கு உத்தரவால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாநிலங்கள் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் சாலைகளும் அனாதையாக வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.

இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மிக அமைதியாக காணப்படுகிறது. இது குறித்து பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில்,  இயக்குனர் சேரன் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், சென்னை மாநகராட்சி வாகன இரைச்சல் புகை எதுவும் இன்றி அமைதியான நிலையில் சுத்தமாக உள்ளதால் ஆங்காங்கே பறவைகளின் எண்ணிக்கை சென்னை நகருக்குள் அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஒரு இடத்தில் 30 புறாக்கள் கூடுகிறது என்றால் அவ்விடங்களில் இந்த காலகட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட புராக்கல்பகுவிந்த வண்ணம் காணப்படுகின்றனர். வீடுகளின் மொட்டை மாடிகளில் பறவைகள் வந்து அமர்கின்றன.

இந்த சூழ்நிலையில் மக்களும் கொரோனா அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பறவைகளுக்கு உணவளிப்பது உள்ளிட்ட நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு சொல்லித் தந்தால் மிக நன்றாக இருக்கும் என்று சேரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |