செர்பிய அரசு ரஷ்ய நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 27-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. எனவே, உலக நாடுகள் போரை நிறுத்த வலியுறுத்தி வருகின்றன. எனினும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் செர்பியா, ரஷ்யா மீது பொருளாதார தடையை அறிவிக்க முடியாது என்று கூறியிருக்கிறது.
இதுகுறித்து செர்பியாவின் உள்துறை அமைச்சரான அலெக்சாண்டர் வுலின் தெரிவித்திருப்பதாவது, ரஷ்ய நாட்டு மக்களின் சொத்துக்களும் அந்நாட்டு கூட்டமைப்பின் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்படக்கூடிய நடவடிக்கையை செர்பியா எப்போதும் மேற்கொள்ளாது.
அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவிக்க முடியாது. அந்நாட்டின் ஊடகங்களையும் நாங்கள் தடை செய்யமாட்டோம் என்று கூறியிருக்கிறார்.