‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலின் நாயகன் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ‘காற்றுக்கென்ன வேலி’. இந்த சீரியலில் நாயகனாக தர்ஷன் நடித்து வருகிறார். இந்த சீரியலின் நாயகனுக்கு சமூகவலைதளத்தில் நிறைய ரசிகர் பக்கங்கள் உள்ளன.
இந்நிலையில், இவர் திடீரென சீரியலில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏனெனில், இவர் சில படங்களில் நடிக்க இருப்பதால் காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு பதில் இந்த சீரியலில் சுவாமிநாதன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
https://www.instagram.com/p/CSOnwuYrnik/