பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிபருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”பாக்கியலட்சுமி”. இந்த சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். சமீபத்தில், இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பிறகு இவர் தான் சீரியலிலிருந்து விலகியதாக ரசிகர்களுக்கு விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து, இவர் சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய புகைப்படத்துடன் அறிவித்திருக்கிறார்.
https://www.instagram.com/p/CWmHsRUhySi/