அந்தமான் நிகோபார் தீவில் உள்ள போர்ட்பிளார் என்ற நகரில் இன்று காலை 6.27 மணியளவில் திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவில் உள்ள போர்ட்பிளார் என்ற நகரில் இன்று காலை 6.27 மணியளவில் திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நிலநடுக்கவியல் மையம் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் இன்று காலை 7.21, 9.12 மற்றும் 9.13 மணி அளவில் தொடர்ந்து ரிக்டர் அளவில் 4.6, 6.1, 5.9 என அடுத்தடுத்து நில நடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க புயல் மையம் இந்த நிலநடுக்கம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதேசமயம் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை.