Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தொடர் கனமழை” வெள்ள நீரோடு வீட்டிற்குள் புகுந்த பாம்புகள்…….. அச்சத்தில் சென்னை புறநகர் வாசிகள்…!!

கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சென்ற வருடம் மழை பெய்யாததன்  காரணமாக இந்த வருடம் மே மாதத்தில் ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டதால் சென்னைவாசிகள் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வந்தனர். ஆகையால் சென்னைவாசிகள் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களது நம்பிக்கையை வீணடிக்காமல் வடகிழக்கு பருவமழை இந்த வருடம் அவர்களுக்கு கை கொடுத்து உள்ளது.

இதனால் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட சென்னைவாசிகளின் நீர் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகள் நிரம்பி வழிய ஆரம்பித்து உள்ளன.  இது ஒருபுறம் சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் மறுபுறம் கன மழையினால் மழை நீர் நிலத்திற்குள் வடியாமல் தேங்கி நின்று வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்களை பெரும் அவதிக்குள்ளாகி வருகிறது.

குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் அடையார் சோழிங்கநல்லூர் சிட்லபாக்கம் கூடுவாஞ்சேரி பகுதிகளில் இடுப்பளவு தேங்கிய மழை நீரில் பொதுமக்கள் கடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பொதுமக்களாளும் மழைநீரை வடிகட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் வெள்ள தடுப்பு அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு அதனை நீரை  அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெள்ளநீரோடு பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் வீட்டிற்குள் புகுவதால் குழந்தைகளுடன் வசித்து வரவே மிகுந்த அச்சம் கொள்கின்றனர் பொதுமக்கள். அதில் சிலர் அவர்களது வீட்டின் மொட்டைமாடியில் தஞ்சம் புகுந்து உள்ளனர். மேலும் சிலர் வீட்டை பூட்டிவிட்டு தங்களது உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

Categories

Tech |