Categories
மாநில செய்திகள்

“சயனைடு கலந்த பிரசாதம்” 10 பேரை கொன்ற சீரியல் கில்லர்…….. ஆந்திராவில் கைது….!!

ஆந்திராவில் பிரசாதத்தில் சயனைடு கலந்து கொடுத்து 10 பேரை கொலை செய்த சீரியல் கொலைகாரனை மேற்கு கோதாவரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 16ஆம் தேதி வேலூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் நாகராஜ் சாலையில் மயங்கிய நிலையில் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மற்றும் நகை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நாகராஜை என்டிஆர் காலனியைச் சேர்ந்த சிம்மாதிரி என்கின்ற சிவா சயனைடு கலந்த பிரசாதம் கொடுத்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்துச் சிம்மாதிரியை பிடித்து விசாரணை செய்ததில்,

Image result for சயனைடு

கடந்த 20 மாதங்களில் தனது பாட்டி உள்ளிட்ட 10 பேரை இதேபோல கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க 10 பேரிடமும் அட்சய பாத்திரம் இருப்பதாக கூறி பணம் மற்றும் நகையை இரட்டிப்பு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். அதை நம்பி பணம் மற்றும் நகைகளை கொடுப்பவர்களுக்கு சயனைடு கலந்து பிரசாதத்தை வழங்கி கொன்றுவிடுவார். இதே போல் 10 பேரை கொன்று 28 லட்சம் ரூபாய் ரொக்கம் 30 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளார். இதற்கு விஜயவாடாவை சேர்ந்த ஷேக் அகமது என்பவரும் உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் ஒரு லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 23 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |