சீரியல் நடிகர் சஞ்சீவ் தனது அண்ணனின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் கதாநாயகனாக நடித்தவர் சஞ்சீவ் கார்த்திக். இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் . சமீபத்தில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது . சஞ்சீவ் – ஆல்யா இருவரும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தங்கள் மகளுடன் விளையாடும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தனர் . அதுமட்டுமில்லாது இந்த நட்சத்திர ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் .
சஞ்சீவ் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதன்பின் நீயும் நானும் , குறும்புக்கார பசங்க உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார் . ஆனால் அவை எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை . இதன்பின் சின்னத்திரைக்கு வந்த சஞ்சீவ் ராஜா ராணி சீரியல் மூலம் அதிக அளவு பிரபலமடைந்தார். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘காற்றின் மொழி’ என்ற தொடரில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சஞ்சீவ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .