Categories
உலக செய்திகள்

“45 வருடங்களாக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட நபர் சிறையில் பலி.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

இங்கிலாந்தில் சிறையிலிருந்த 70 வயது கைதி கொரோனா தொற்று ஏற்பட்டு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஹிண்ட்லி என்ற நகரில் வசித்த 70 வயது முதியவரான, டென்னிஸ் ஸ்மலி கடந்த 1970 ஆம் வருடத்திலிருந்து 45 வருடங்களாகத் தொடர்ந்து கற்பழிப்பு குற்றங்களை செய்து வந்திருக்கிறார். பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டதால், கடந்த 2014 ஆம் வருடத்தில் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர் மீது 25 பாலியல் குற்றங்கள் உட்பட மொத்தமாக 44 வழக்குகள் உள்ளது. அதன்பின்பு லிவர்பூல் நகரத்தில் இருக்கும் வாக்பில்ட் நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு 25 வருடங்கள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்பின்பு கடந்த 2016 ஆம் வருடத்தில் இருந்து அவர் சிறையில் இருந்தார்.

அதன் பின்பு, கடந்த மார்ச் மாதம் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். எனவே, அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |