Categories
உலக செய்திகள்

15 வருடங்களில் 31 பெண்களை வன்கொடுமை செய்த நபர்…. இறந்த பின் குற்றவாளி கண்டுபிடிப்பு…!!!

ஆஸ்திரேலியாவில் 15 வருடங்களில் சுமார் 31 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த 1985 ஆம் வருடத்தில் இருந்து 2001 ஆம் வருடம் வரை 31 பெண்கள் ஒரு நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி பல பேருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்று கூறப்பட்டது.

பாதிப்படைந்த பெண்களின் வயது 14 முதல் 55 வயது வரை இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகையில், அந்த நபர் கருப்பு நிறம் கொண்டவர், அவரின் கண்கள் பழுப்பு நிறத்திலும், மூக்கு அகன்றும் இருக்கும், அவரின் உயரம் 160 லிருந்து 180 சென்டிமீட்டர் வரை இருக்கும் என்று ஒரே மாதிரியான அடையாளங்களை தெரிவித்தனர்.

அதன் பிறகு கடந்த 2019 ஆம் வருட தொடக்கத்தில் புலனாய்வாளர்கள், காவல்துறையினரின் தகவல்களில் இருந்து டிஎன்ஏ மாதிரிகளை ஆராய்ந்தனர். தீவிரமாக போராடி கடந்த  செப்டம்பர் மாதத்தில் டிஎன்ஏ மாதிரிகளை வைத்து கீத் சீம்ஸ் என்ற நபர் தான் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த நபர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் உயிரிழந்துவிட்டார்.

Categories

Tech |