தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு நடிகர் ராஷ்மிகா பற்றி சமீப காலமாகவே இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது நடிகர் ராஷ்மிகா கன்னட சினிமாவை அவமதித்ததால் அவரை கன்னட சினிமாவில் இருந்து நிரந்தரமாக விளக்குவதற்கு தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நடிகர் ராஷ்மிகா தன்னைப் பற்றி பரவும் தகவல்களுக்கு தற்போது கவலையுடன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, எனக்கு சில விஷயங்கள் தாங்க முடியாத அளவுக்கு வேதனையை தருவதோடு தேவையில்லாத விஷயங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. நான் பேசாத விஷயங்களை எல்லாம் பேசியதாக செய்திகள் பரவுகிறது. இந்த செய்திகள் தவறாக சென்று எனக்கு எதிராகவே தற்போது மாறுகிறது.
இந்த செய்திகள் சினிமா துறையின் மீதும் எனக்கு ஆதரவாக இருக்கும் உறவுகளின் மீதும் எதிர்வினையை ஆற்றுகிறது. இந்த செய்திகளால் நான் மட்டுமின்றி என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கவலைப்படுகிறார்கள். நான் என்னை பற்றி வரும் நல்ல விமர்சனங்களை எப்போதும் வரவேற்பேன். ஆனால் என்னை பற்றி தேவையில்லாத விமர்சனங்கள் வரும்போது மிகவும் வருத்தமாகவும் கவலையாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.