Categories
தேசிய செய்திகள்

“சீரம்” தீ விபத்தில் 5 பேர் பலி…. ரூ.25 லட்சம் நிவாரணம்..!!

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனத்தலைவர் ஆதர் பூனவாலா, தெரிவித்து உள்ளார்.

புனேயில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தை தயாரித்து வரும் இந்திய நிறுவனம் சீரம். இந்நிறுவனத்தில் 5 மாடி கட்டிடத்தில் நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததாகவும், உயிரிழந்த ஐந்து பேரும் கட்டுமான தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது.

இந்நிலையில் நிறுவனத் தலைவரான ஆதர் பூனவாலா கூறியதாவது உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், எங்கள் சீரம் நிறுவன வளாகத்தில் நடந்த இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கும் வகையில் இருப்பதாகவும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார்.

Categories

Tech |