தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கண்ணுக்குடி மேற்கு கிராமத்தில் தொண்டராம்பட்டு இணைப்பு சாலை இருக்கிறது. இந்த சாலை பாப்பாநாடு மற்றும் மதுக்கூர் பகுதி செல்வதற்கான முக்கியமான பாதையாக உள்ளது. இந்த நிலையில் தொண்டராம்பட்டு இணைப்பு சாலை மண்பாதையாக இருப்பதால் மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் குளம்போல் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக் கொள்கிறது. மேலும் சேறும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஆகவே மேற்கண்ட பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.