Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சேறும் சகதியுமாக இருக்கு” இப்படிதான் எடுத்து சென்றோம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெரியார் நகர் கிராமத்தில் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதில் பூண்டி பெரியார் நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இந்நிலையில் இறந்தவரின் சடலத்தை கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் வயல் வழியே சேறும் சகதியுமாக உள்ள மண் பாதையில் எடுத்துச் சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியபோது “கிராமத்தில் ஒருவர் இறந்தால் சேறும் சகதியுமாக உள்ள மண் பாதையில் அவரது சடலத்தை கொண்டு செல்லும் அவலநிலை இருக்கின்றது. ஆகவே பூண்டி பெரியார் நகர் மயானத்திற்கு செல்ல சாலை வசதி அமைத்து தர வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |