சுவிஸ் ரயில் பாதை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பள்ளம் காரணமாக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாசேனுக்கும் ஜெனீவாவுக்கும் இடையிலான ரயில் பாதைக்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு இடங்களில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரயில் சேவை தற்போது மீண்டும் துவக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் 6 ரயில்களுக்கு பதிலாக 4 ரயில்கள் மட்டுமே ஒரு மணி நேரத்திற்கு இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இதே நிலை இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் Morges மற்றும் Allaman-க்கு இடையே பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரயில் பாதை செல்லும் இடத்திற்கு கீழே சுமார் 10 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் தோண்டும் பணியானது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த திட்டம் ஜெனீவா ஏரியிலிருந்து தண்ணீரை சுரங்கம் வழியாக எடுத்துச் செல்வதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ரயில் பாதைக்கு அருகில் உள்ள மண் திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த காரணத்தினால் ரயில் சேவை பணிகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.