கர்நாடக மாநிலத்தில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பணியில் பெங்களூரை சேர்ந்த இரண்டு பெண்கள் ஈடுபட்டிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அது மட்டுமில்லாமல் பல கட்டுப்பாடுகளையும் அம்மாநில அரசு அறிவித்து வருகின்றது. இந்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பெங்களூருவை சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் முன்வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: “ஒட்டுமொத்த குடும்பமும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், உயிருக்கு அஞ்சி வீட்டில் இருக்க மனமில்லை என்றும், அதனால் தான் சடலங்களை அடக்கம் செய்யும் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும்” அவர்கள் தெரிவித்தனர்.