விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொண்டதன் அடிப்படையில் மக்கள் எண்ணிக்கை குறைந்ததால் சிறப்பு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
உலகம் முழுவதும் வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் வெளிமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் மக்களை இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்ப்பதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் விமானங்கள் இயக்கப்பட்டன. தற்போதுவரை அந்த சிறப்பு விமானங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் சமீபத்தில் இரண்டு விமானங்கள் பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து டெல்லி வழியாக 43 பேரும், மஸ்கட்டில் இருந்து 176 பேரும் என 219 பேர்களுடன் 2 சிறப்பு விமானங்கள் சென்னையை வந்து சேர்ந்தன.
விமான நிலையங்களில் பயணிகளுக்கு தொற்று இருக்கிறதா? என்பதை பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். அந்தவகையில் குவைத் மற்றும் கத்தாரில் இருந்து வந்த பயணிகளிடம் பரிசோதனை செய்ததில் சிலருக்கு தொற்று இருப்பது கண்டறிந்து அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விமான நிலையங்களில் மருத்துவ சான்றிதழை ஒப்படைத்தால் மட்டுமே பயணிகள் விமானங்களின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் மக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டதால் குவைத் மற்றும் கத்தாரில் இருந்து சென்னை புறப்பட இருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.