நாலெண்ணெய் அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு
பலரது வீடுகளில் ஆரோக்கியம் கருதி சமையலுக்கு நல்லெண்ணெயை பயன்படுத்தி வருகின்றனர்.சிலர் நல்லெண்ணெயின் மருத்துவ குணம் அறியாமல் அதனை உபயோகப்படுத்த மறுக்கின்றனர். நல்லெண்ணெய்யின் மருத்துவ குணங்கள் சில
- தினமும் காலை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதனால் குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கிறது.
- அதிகப்படியான உடல் சூட்டை குறைக்க நல்லெண்ணெய் சிறிதளவு குடித்தால் உடல் சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.
- நல்லெண்ணெய் குடித்து வருவதனால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.
- ரத்த அழுத்தத்தை சீரான அளவில் வைக்க உதவிபுரிகிறது நல்லெண்ணெய்.
- எலும்புகளை வலிமையாக்க நல்லெண்ணெய் பெரிதும் உதவி புரிகிறது.
- மூட்டு வலியை குணப்படுத்த நினைப்பவர்கள் உணவில் நல்லெண்ணெயை சேர்த்துக் கொண்டாலும் அல்லது குடித்து வந்தாலும் நல்ல பலனைப் பெறலாம்.
- பத்து நிமிடங்கள் நல்லெண்ணெய் வைத்து வாய் கொப்பளித்து வருவதால் பல் வலி, ஈறு பிரச்சனைகள் நீங்கி வாய் ஆரோக்கியமாக இருக்கும்.