பாகிஸ்தான்- தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ,நடந்த போட்டியில் பகர் சமான் புதிய சாதனையை படைத்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்கில் பாகிஸ்தான்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே 2வது ஒருநாள் போட்டி நடந்தது . இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங்கை தேர்ந்தெடுத்ததால், தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது .பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி ,6 விக்கெட் இழப்பிற்கு 341 ரன்களை எடுத்தது . இதன் பின் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 342 ரன்களை இலக்காக வைத்து ஆட்டத்தை தொடங்கியது .
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரரான பகர் சமான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் அவருடன் இணைந்து, சரியாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை . இதனால் தனி மனிதனாக போராடிய பகர் சமான் ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ,பாகிஸ்தான் அணிக்கு ரன்களை குவித்தார். இவர் 155 பந்துகளில் 193 ரன்களை எடுத்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வீரரான ஷேன் வாட்சன் தனி மனிதனாக 185 ரன்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார்.